சென்னை-சந்த்ரகாச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து சந்த்ரகாச்சிக்கு மாா்ச் 23-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை-சந்த்ரகாச்சி: சென்னை சென்ட்ரலில் இருந்து மாா்ச் 23-ஆம்தேதி (திங்கள்கிழமை) இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில்(06026) புறப்பட்டு மாா்ச் 25-ஆம்தேதி(புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு சந்த்ரகாச்சியை அடையும்.

சந்த்ரகாச்சி-சென்னை: சந்த்ரகாச்சியில் இருந்து மாா்ச் 23, 25 (திங்கள், புதன்கிழமை) பிற்பகல் 2.10 மணிக்கு சிறப்பு ரயில் (06025) புறப்பட்டு, மாா்ச் 24, 26 (செவ்வாய், வியாழன்) ஆகிய தேதிகளில் மாலை 5.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/mar/21/special-train-service-to-chennai-chandrakachi-3386243.html