நாளை முதல் முழு ஊரடங்கு: பொருட்கள் வாங்க குவிந்த சென்னை மக்கள்! – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

சென்னை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரையில் ஏப்ரல் 26 ஞாயிறு காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 புதன் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

image

கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின்படி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26 ஞாயிறு காலை 6 மணி முதல் ஏப்ரல் 28ம் தேதி இரவு 9மணி வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 4 நாட்களுக்கு கடைகள் ஏதும் இருக்காது என்பதால், மளிகை, காய்கறி போன்ற பொருட்களை வாங்கிக் கொள்ள சென்னையில் பொதுமக்கள் இன்று காலை முதலே குவிந்தனர்.

image

சென்னையின் பல இடங்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து தேவையான பொருட்களை மக்கள் வாங்கிச் சென்றனர். பல இடங்களில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Source: http://www.puthiyathalaimurai.com/newsview/69123/People-are-on-panic-buying-mode-in-Chennai