வட சென்னையை தொடர்ந்து கொரோனா பிடியில் மத்திய சென்னை..! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பின் திரு.வி.க.மண்டலத்தில் புதிய தொற்றின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், ராயபுரத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதேபோல், கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் மின்னல் வேகத்தில் தொற்று பரவல் உள்ளது.

தமிழகத்தில் மே 6-ம் தேதி உறுதி செய்யப்பட்ட 771 தொற்றுகளில், சென்னையில் புதிய உச்சமாக 324 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 2328 பேரில், 348 பேர் குணமடைந்துள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 62.92 சதவீதம் ஆண்கள், 37.04 சதவீதம் பெண்களும், திருநங்கை இருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் நேற்று அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 60 பேருக்கும், தேனாம்பேட்டையில் 55 பேருக்கும், ராயபுரத்தில் 54 பேருக்கும், அடையாறு 38 பேருக்கும், வளசரவாக்கத்தில் 30 பேருக்கும், திரு.வி.க.நகரில் 17 பேருக்கும், அண்ணாநகரில் 22 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தண்டையார்பேட்டையில் 19 பேரும், திருவொற்றியூரில் 8 பேரும், அம்பத்தூரில் 7 பேரும், பெருங்குடியில் 5 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணலியில் புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. சில நாட்களுக்கு பின் திரு.வி.க.நகரில் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.அதேவேளையில் அடையாறு, தேனாம்பேட்டை, ராயபுரத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோயம்பேடு பரவலால் கோடம்பாக்கத்தில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 271 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 6 நாட்களில் மட்டும் 1,874 பேருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 48.2 சதவிகிதம் பேர் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:
திரு.வி.க.நகர் -412

கோடம்பாக்கம் -387

ராயபுரம் மண்டலம்  -375

தேனாம்பேட்டை -285

அண்ணா நகர் -191

வளசரவாக்கம் -176

தண்டையார்பேட்டை -168

அம்பத்தூர் -105

அடையாறு -91

திருவொற்றியூர் -40

மாதவரம் -30

பெருங்குடி -20

சோழிங்கநல்லூர் -15

ஆலந்தூர் -14

மணலி -13

ஆரம்பத்தில், வட சென்னையில் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் மட்டும் 955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 41 சதவீதமாகும்.

அதேபோல், கடந்த சில நாட்களாக சென்னை மத்திய மண்டலத்தில் தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மத்திய பகுதிகளான கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம் மண்டலங்களில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1039 ஆக அதிகரித்துள்ளது. இது சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 44.6 சதவீதமாகும்.

Also see…

[embedded content]


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

Source: https://tamil.news18.com/news/coronavirus-latest-news/which-regions-are-most-affected-in-chennai-new-up-date-vaiju-tami-288387.html