சென்னை தப்ப இதுவே லாஸ்ட் சான்ஸ் .. இழுத்து பூட்டினால் மட்டும் போதாது.. வீடுவீடாக டெஸ்ட் தேவை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: இதுதான் கடைசி சான்ஸ்… சென்னை உட்பட 4 மாவட்டங்கள் இழுத்து பூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.. இந்த அறிவிப்பினை பயன்படுத்தி கொண்டு மொத்த சென்னையையும் வளைத்து வளைத்து டெஸ்ட் செய்ய வேண்டும்.. இதுவே நமக்குக் கிடைத்துள்ள நல்ல சான்ஸ்.

கையை மீறி போய் கொண்டிருக்கிறது சென்னை.. அதிலும் தளர்வுகள் செய்யப்பட்டதில் இருந்தே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொற்றுகள் தலை தூக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் பொதுமக்களுக்கு அச்சம் அதிகமாகிவிட்டது.

5வது ஊரடங்கை சரியாக பயன்படுத்துங்கள் என்று திமுக தலைவர் உட்பட பலரும் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில்தான் டாக்டர் ராமதாஸ் இன்று ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.. சென்னையில் டெஸ்ட்கள் அதிகம் செய்ய வேண்டும் என்றும், டெல்லியால் முடியும்போது, நம்மால் இதை செய்ய முடியாதா? என்றும் கேள்வியை எழுப்பி இருந்தார்.

imageசென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 12நாட்கள் முழு லாக்டவுன்..முதல்வர் அறிவிப்பு.. முழு விவரம்

அறிக்கை

டாக்டரின் இந்த அறிக்கை முற்றிலும் நியாயமானதே.. ஆனால் உண்மையிலேயே கள நிலவரம் பார்த்தால் டெல்லியைவிட சென்னையில்தான் அதிகம் பாதிப்பு.. அவர்கள் டெஸ்ட் எடுத்தே இந்த எண்ணிக்கை வந்துள்ளது என்றால், நமக்கு இன்னும் முழுமையாக டெஸ்ட் செய்யப்படவில்லை.. இப்போதுதான் பரிசோதனைகளை சென்னையில் அதிகப்படுத்தி வருகிறார்கள்.

4 மாவட்டங்கள்

சென்னையில் அதிக தொற்று உள்ளதாலேயே திருவள்ளுர், காஞ்சிரபுரம் உட்பட பக்கத்து மாவட்டங்களிலும் தொற்று அதிகமாகி விட்டது.. சென்னையிலிருந்து போனவர்களால் பிற மாவட்டங்களிலும் பரவல் அதிகரித்தது. அதனால் தான் ஜூன் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி இரவு 12 மணி வரை பெருநகர் சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழு முடக்கம் அமலாக்கப்படவுள்ளது.

Chennai உட்பட 4 மாவட்டங்களில் மீண்டும் lockdown… அரசு அதிரடி அறிவிப்பு

படுக்கை வசதிகள்

தமிழக அரசு எடுத்த மிக நல்ல அறிவிப்பு இது.. இந்த சமயத்தில் இதுதான் தொற்றை கட்டுப்படுத்த தீர்வாகவும் இருக்கும்.. ஆனால் மாவட்டங்களை இழுத்து பூட்டினால் மட்டும் போதாது.. இந்த 4 மாவட்ட ஊரடங்கினை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்… இப்படி ஒரு வாய்ப்பு திரும்பவும் நமக்கு வராது.. இதைவிட்டாலும் தொற்று பன்மடங்காகி விடும்… இப்போதே தொற்று உள்ளவர்களுக்கு போதுமான படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள் இல்லை என்ற புகார் எழுந்து வரும் நிலையில், இந்த வாய்ப்பினை கடைசி வாய்ப்பாகவும் அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டி உள்ளது.

டெஸ்ட்டுகள்

சென்னை முழுவதும் மொபைல் வேன் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வீடு வீடாக போய் கூட டெஸ்ட் செய்யலாம். ஆங்காங்கு உள்ள தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்தி அவர்களை வைத்து பகுதிகளை ஒதுக்கி டெஸ்ட்டுகளை அதிகரிக்கலாம். ஊரடங்கைப் பயன்படுத்தி நோய் பாதிப்பை விரைவாக கண்டறிய முயற்சிக்கலாம்…. டெல்லியைவிட தமிழ்நாட்டில் பாதிப்பு கொஞ்சம் குறைவுதான்.. ஆனால் அவர்கள் முழுமையாக டெஸ்ட்டினை கையில் எடுத்துள்ளனர்.. அதி வேகமாக அதற்குரிய வசதிகளும் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. இதனால் சில நாட்களிலேயே டெஸ்ட்கள் முழுவீச்சில் நடத்த போகின்றனர்.

சென்னை

இதுபோலவேதான் நாமும் டெஸ்ட்களை துரிதப்படுத்த வேண்டி உள்ளது.. காரணம் முக்கிய பொருளாதார மையமான சென்னையை விட்டுவிட்டால் தமிழகமே அவ்வளவுதான்.. சென்னை பாதிப்பு என்பது நம் தமிழகத்துக்கே பாதிப்பு.. தமிழகம் பாதிப்பு என்றால் நாடு தழுவிய அளவிலும் பாதிப்புதான். எனவே டெல்லியை போல சென்னையிலும் அனைவருக்கும் சோதனை செய்ய வேண்டும்… அதற்கான நடவடிக்கைகளை போர்கால வேகத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

லாஸ்ட் சான்ஸ்

இதுவரை எப்படியோ, இனியாவது சென்னைவாசிகள் அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.. இதில் அரசியலை கொண்டு வந்து நுழைக்காமல், அரசியல் பாரபட்சமே இல்லாமல் இணைந்து செயல்பட வேண்டும்… ஒரு போரை எதிர்கொள்வது போல இதில் செயல்பட வேண்டும்.. டெஸ்ட்டுகளைவிட முந்தி கொண்டு சென்று கொண்டிருக்கும் கொரோனாவை இழுத்து பிடித்து அழிக்க வேண்டிய கடைசி சான்ஸ் நமக்கு கிடைத்துள்ளது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-lockdown-covid19-tests-should-be-increased-in-chennai-388351.html