லாக்டவுன் 6.0: சென்னை மாநகராட்சியில் ஜூன் 30 வரை இறைச்சி கடைகள் மூடல் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் வரும் 30-ந் தேதி வரை அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் வரும் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு வீச்சில் அமல்படுத்தப்படுகிறது. கடந்த கால லாக்டவுன்களைப் போல அல்லாமல் முழுமையாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

imageகொரோனா லாக்டவுன் 6.0 : சென்னைவாசிகளே அவசியம் இல்லாமல் வெளியே வராதீங்க – காவல்துறை

இறைச்சி கடைகள் மூடல்

இது தொடர்பான அறிவுறுத்தல்களை அரசு தரப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் அதிகமாக கூடக் கூடிய இறைச்சி கடைகளையும் வரும் 30-ந் தேதி வரை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:

4 மாவட்டங்களில் ஊரடங்கு

பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சி கூடங்கள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு , சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 19.06.2020 முதல் 30.06.2020 வரை முழுமையான ஊரடங்கை அமுல்படுத்த அறிவித்துள்ளது.

அனைத்து இறைச்சி கடைகளும் மூடல்

ஆகவே கோவிட்19 பெருந்தொற்று மக்களிடையே மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மேற்கூற்ய நான்கு இறைச்சிக் கூடங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகரஅட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோழி/ ஆடு/ மாடு இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் கடைகள் ஆகியவை 19.06.2020 முதல் 30.06.2020 முழுமையாக மூடப்படுகின்றன.

பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை

எனவே பொதுமக்கள், வியாபாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு சென்னை மாநகராட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க ஏற்கனவே பல மாவட்டங்களில் லாக்டவுன் காலத்தில் இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/lockdown-6-0-all-meat-shops-to-be-shut-down-in-chennai-till-june-30-388708.html