சென்னை: `புகாரை ஏன் வாபஸ் பெற்றேன்?’ -உதவி இன்ஜினீயர் விவகாரத்தில் கல்லூரி மாணவி விளக்கம் – Vikatan

சென்னைச் செய்திகள்

அதனால் உதவி இன்ஜினீயரின் ஆடியோ வெளியானதும் அதை அவருக்குப் பிடிக்காதவர்களே அதிகளவில் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அரசியல் தலையீடு, வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஆத்திரம் ஆகியவற்றுக்கு வடசென்னையில் பணியாற்றும் உதவி இன்ஜீனியர் பழிவாங்கப்பட்டுள்ளார். இதே நிலைமைதான் மற்ற வார்டுகளிலும் உள்ளன” என்றனர்.

சென்னை மாநகராட்சி

இதையடுத்து உதவி இன்ஜினீயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து சம்பந்தப்பட்ட இன்ஜினீயரிடம் கேட்டதற்கு, `எனக்கு இதுவரை சஸ்பெண்ட் உத்தரவு வரவில்லை. உண்மையில் அந்த ஆடியோவில் இருக்கும் குரல் என்னுடையது அல்ல’ என்றார் சுருக்கமாக.

கல்லூரி மாணவியிடம் கேட்டபோது, `வீட்டில் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்னை வேண்டாம் என்று கூறினார்கள். அதனால் அந்தப் பிரச்னையை பேசி முடித்துவிட்டோம். நான் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைக்கூட வாபஸ் பெற்றுவிட்டேன். எஃப்ஐஆர் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்’ என்றார்.

இதுகுறித்து மாணவி தரப்பு வழக்கறிஞர் ஆறுமுகத்திடம் பேசினோம். “மாணவியிடம் விசாரித்தபோது அவர் சம்பந்தப்பட்ட இன்ஜினீயர் மீது புகாரளித்துள்ளார். ஆனால், தற்போது புகார் மீது எந்தவித நடவடிக்கையும் வேண்டாம் என்று கூறியுள்ளார். விரைவில் அதுதொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவுள்ளார்” என்றார்.

சென்னை மாநகராட்சி இன்ஜினீயர், கல்லூரி மாணவி ஆடியோ தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/student-talks-on-chennai-corporation-engineer-audio-issue