சென்னை: `மாணவி, சட்டரீதியாக வாபஸ் பெறட்டும்!’ – சிக்கலில் மாநகராட்சி உதவிப் பொறியாளர் – Vikatan

சென்னைச் செய்திகள்

வழக்கு பதிவு

மேலும், சம்பந்தப்பட்ட இன்ஜினீயர் நல்லவர் என்றும் அவர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தார்.

இந்தநிலையில், எஸ்பிளனேடு மகளிர் போலீஸார், சம்பந்தப்பட்ட உதவி இன்ஜினீயர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 354 A மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்த போலீஸார் உதவி இன்ஜினீயரை தேடிவருகின்றனர்.

சென்னை மாநகராட்சி

இதுகுறித்து துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் கேட்டதற்கு, “உதவி இன்ஜினீயரும் மாணவியும் பேசிய ஆடியோ அடிப்படையில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட இன்ஜினீயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மாணவி தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு செய்த பிறகு நீதிமன்றத்தில்தான் அதைச் சட்டரீதியாக வாபஸ் பெறுமாறு மாணவியிடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.

போலீஸார் வழக்கு பதிவு செய்ததையடுத்து மாணவி தரப்பிலும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-filed-case-against-corporation-assistant-engineer