சென்னை மாநகராட்சி சார்பில் நாளொன்றுக்கு 14 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை

சென்னையில், மாநகராட்சி சார்பில் நாளொன்றுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவோர் எண்ணிக்கை 14,030 ஆக உயர்ந் துள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களைவிட சென்னையில் கரோனாதொற்று அதிகரித்து வந்தது. இதைக் கட்டுப்படுத்த, நாளொன்றுக்கு எத்தனை தொற்று கண்டுபிடிக்கப்படுகிறதோ, அதைவிட 10 மடங்கு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.

தொற்று குறைகிறது

இதைத் தொடர்ந்து சென்னையில் படிப்படியாக பரிசோதனை எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த 4-ம் தேதி இந்த பரிசோதனை எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது. புதியஉச்சமாக 19-ம் தேதி ஒரே நாளில்14,030 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைகள் அதிகரித்ததன் காரணமாக சென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக மாநகராட்சி தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறிய தாவது:

69,382 பேர் குணமடைந்தனர்

சென்னையில் இதுவரை 5 லட்சம் பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.200 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜூலை 19 நிலவரப்படி புதிய தொற்று 1,254 ஆக குறைந்துள்ளது.

இதுவரை 85 ஆயிரத்து 859 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் 69 ஆயிரத்து 382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 ஆயிரத்து42 பேர் (17.59 சதவீதம்) சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 1,434 பேர் (1.61 சதவீதம்) உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

அன்பு வாசகர்களே….

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு – இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

– வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/565573-14000-people-tested-everyday-in-chennai.html