சென்னை: `முறிந்த காதல்; வில்லங்க ஃபேஸ்புக் பதிவுகள்! – இன்ஜினீயரால் பாதிக்கப்பட்ட 100 பெண்கள் – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து தகவலறிந்த கல்லூரி மாணவியும் அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள பெண்களின் செல்போன் நம்பர்கள் எப்படி அந்தப் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டது என போலீஸார் விசாரித்தனர். சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியிடம் அம்பத்தூர் மகளிர் போலீஸார் விசாரித்தனர். அப்போது மாணவி அளித்த தகவலின்படி ஓரகடம் பகுதியில் குடியிருக்கும் இன்ஜினீயர் ஒருவர் மீது போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. இதற்கிடையில் சைபர் க்ரைம் போலீஸாரும் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்ட கம்ப்யூட்டரின் ஐபி முகவரி உள்ளிட்ட விவரங்களை அம்பத்தூர் போலீஸாருக்கு தெரிவித்தனர்.

இன்ஜினீயர் மகாதேவன்

இதையடுத்து அம்பத்தூர் மகளிர் போலீஸார், மாணவியின் பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கிய இன்ஜினீயர் மகாதேவனிடம் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், “இன்ஜினீயர் மகாதேவனின் சொந்த ஊர் தேனி. இவரின் தந்தை இறந்துவிட்டார். அம்மா, அக்காளுடன் சென்னை அம்பத்தூர் ஒரகடம், காஞ்சிநகரில் குடியிருந்து வருகிறார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ள மகாதேவன் (24), தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-engineer-in-cheating-case-2