சென்னை மக்களுக்காக Namma Chennai செயலி: சென்னை மாநகராட்சி அசத்தல் – Zee Hindustan தமிழ்

சென்னைச் செய்திகள்

Chennai: பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) நடவடிக்கை மேற்கொள்ளும். இது நல்ல திட்டம் என்பது மட்டுமில்லாமல், இந்த செயலி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கொரோனா (COVID-19 Pandemic) காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் பல முக்கிய நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது. மேலும் கொரோனா குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறது.

தற்போது “Namma Chennai” செயலி மூலம் மக்கள் தங்கள் குறைகளையும் புகார்களையும் தெரியப்படுத்தலாம். அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு, மழைநீர் தேக்கம், குப்பை தேக்கம், சேதமடைந்த சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது சுகாதாரம் போன்றவை சார்ந்த குறைகையும், புகார்களையும் சென்னை மக்கள் தெரியப்படுத்தலாம். புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

ALSO READ | 

இனி மக்கள் அங்கும், இங்கும் அலைய வேண்டிய நிலை ஏற்படாது. வீட்டிலிருந்தே “நம்ம சென்னை” செயலி மூலம் சென்னை மாநகராட்சியை தொடரப்பு கொள்ளலாம். 

“Namma Chennai” செயலியை எப்படி பதிவிறக்கம் செய்து என்று கீழே விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Source: https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-people-let-us-know-your-complaints-through-the-namma-chennai-app-343622