புற்றுநோய் மருந்து தயாரிப்பில் நாடு தன்னிறைவு பெற வேண்டும்.. கமிட்டி அமைத்து சென்னை ஹைகோர்ட் உத்தரவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: புற்று நோய் மருந்து உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற, கமிட்டி உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

மருந்து ஆய்வு தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த விங்கெம் லேப் அமைப்பின் சார்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது விசாரணையை நடத்திய, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தனது 226 பக்க உத்தரவில் கூறியதாவது:

மருந்து தயாரிப்புகளில் இந்தியா ஒரு முன்னோடியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும் கூட, மருந்து தயாரிப்பின் அடிப்படை பொருட்களுக்கு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதைப் பெரிதும் சார்ந்துள்ளோம்.

இரு நாடுகளுக்கிடையில் பதட்டங்கள் அதிகரித்தால் அது நோயாளிகளையும் பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது. நாட்டிற்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவர உதவுவதற்கும், புற்றுநோய் மருந்து உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கும், 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.

imageகனிம வள கொள்ளையை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் – அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

நாம் ஏற்கனவே திறமையாளர்களை, வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டோம். இப்போதாவது நமது விஞ்ஞானிகளையும், நிபுணர்களையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே மத்திய மருந்து துறை, நிதித்துறைகளின் இணை செயலாளர் மட்டத்திலான அதிகாரிகள் அடங்கிய 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட வேண்டும், மனுதாரர் போன்ற ஆய்வகங்களுக்கு நிதி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும். புற்றுநோய் மருந்துகள் தயாரிப்பில் இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக மாற்ற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி கிருபாகரன்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-orders-formation-of-panel-to-ensure-self-reliance-in-cancer-drugs-400002.html