சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை மாநகராட்சி

  • News18
  • Last Updated:
    December 27, 2020, 6:19 AM IST
  • Share this:
சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள 5,574 சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ருக்மாங்கதன் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மண்டல அதிகாரி ராம் பிரதீபன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர்.

விதிமீறல் கட்டிடங்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Also read… 7.5 சதவீத இடஒதுக்கீட்டை புதுச்சேரி அரசு பள்ளி மாணவருக்கு வழங்க நீதிமன்றம் மறுப்பு!

இதையடுத்து, ஐந்தாவது மணலத்தைப் போல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்வதாக உத்தரவாதம் அளித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.


First published: December 27, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-corporation-assured-the-hc-action-will-be-taken-against-illegal-buildings-in-zones-of-corporation-vin-385599.html