“வெளிப்படைத்தன்மையுடன் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும்” – சென்னை மாநகராட்சி ஆணையர் – நக்கீரன்

சென்னைச் செய்திகள்

 

 

மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்கப்படுவதற்கான குலுக்கல் முறையில் யாரையும் புறக்கணிக்கவில்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 
 

மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்கப்படுவதற்கான குலுக்கல் முறையில் யாரையும் புறக்கணிக்கவில்லை. வெளிப்படைத்தன்மையுடன் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

 

மேலும் ‘அ’ பிரிவில் 1,348 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 540 பேருக்கு மட்டுமே கடைகள் ஒதுக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதேபோல் ‘ஆ’ பிரிவில் 12,974 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 360 பேருக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/shops-will-be-allocated-shaky-manner-transparency-chennai-corporation