வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- சென்னை கலெக்டர் அறிவிப்பு – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னை கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி/தேர்ச்சி, எச்.எஸ்.சி. பட்டயப்படிப்பு மற்றும் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவிதொகை பெற
சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளி
மாணவ-மாணவிகள் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தகுதி உடைய
விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு
அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண், வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/state/2021/01/26074959/2298912/Tamil-News-Chennai-Collector-notice-Unemployed-youth.vpf