சென்னையில் 1000 மியாவாக்கி காடுகள் அமைக்க திட்டம் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

  • News18
  • Last Updated:
    February 1, 2021, 4:42 PM IST
  • Share this:
சென்னையில் இது வரை 30 இடங்களில்  மியாவாக்கி காடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1000 இடங்களில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

சென்னை கோட்டூர்புரத்தில்  மியாவாக்கி காடுகள் (அடர்வனம் ) அமைக்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவுபெற்றதை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியில் கூறியதாவது, மியாவாக்கி காடுகளை சென்னையில் 1000 இடங்களில் அமைக்க வேண்டும் என்பது மாநகராட்சியின் திட்டம். விரைவில் இது சத்தியாமாகும். இதனால், பராமரிப்பு இல்லாத ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்படும். இந்த காடுகளை சுற்றி வசிக்கும் மக்களுக்கு கண்களுக்கு விருந்தளிக்கும்.

காற்று மாசை குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பதோடு, பறவைகள், சிறிய பூச்சியினங்களின் வசிப்பிடமாகவும் இந்த காடுகள் உள்ளது. இதுவரை சென்னையில் 30 இடங்களில் மியாவாக்கி காடுகள் அமைக்கபட்டு, 60,000 மரங்கள் நடப்பட்டுள்ளது. அடையாறில் ஓராண்டுக்கு முன்பாக குப்பை கொட்டப்பட்டு, பராமரிப்பு இல்லாத இடத்தில் மியாவாக்கி காட்டை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தோம். இப்பணிகள் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இங்கு 2160 மரக்கன்றுகள் கோட்டூர்புரத்தில் நடப்பட்டுள்ளது. மரங்களின் வளர்ச்சி நல்ல முறையில் உள்ளது.

இப்பகுதியில் உள்ள மக்களின் மருத்துவ வசதிக்கும் சில மூலிகைகள் பயன்படுகிறது. படிப்படியாக இந்த காடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொது இடங்களில் இது போன்ற குறுங்காடுகளை உருவாக்க எண்ணம் உள்ளவர்கள் மாநாகராட்சியிடம் தெரிவித்தால் அவர்களுக்கு உடனடியாக அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

கோட்டூர்புரம் மியாவாக்கி வனத்திற்காக இதுவரை 15 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திற்கும் இந்த செலவு மாறுபடுகிறது. குறைந்த செலவில் இந்த காடுகள் உருவாக்கப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு பின் பொதுமக்கள் உபயோகத்திற்கு இவை திறக்கப்படும்.Also read… தென்னிந்தியாவில் பாஜக சித்து விளையாட்டு எடுபடாது – கே.எஸ்.அழகிரி!

மற்ற பெருநகரங்களில் உள்ளதை போல், நம்ம சென்னை சிற்பம் நம்முடைய பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக தான் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில், 60,000 பெயர் பலகைகள்( தெருக்களில் வைக்கப்பட்டு தெருக்களின் பெயர்கள்) மாநகராட்சியின் கீழ் உள்ளது. இந்த பலகைகள் மீது போஸ்டர் ஒட்டுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் சமயத்தில் கட்சியினர் ஒட்டினால் அதன் செலவினத்தை  எப்படி பிடிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.


First published: February 1, 2021

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/corporation-commissioner-prakash-said-that-miyawaki-forests-have-been-established-in-30-places-in-chennai-vin-tami-403121.html