VK Sasikala Arrival LIVE: தீவிர அரசியலில் ஈடுபடுவேன்- அடக்குமுறைக்கு அடிபணியமாட்டேன்: சசிகலா – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

வாணியம்பாடி: தீவிர அரசியலில் நான் நிச்சயமாக தொடர்ந்து ஈடுபடுவேன்; அடக்குமுறைக்கு ஒருபோதும் அடிபணியமாட்டேன் என்று சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

image
#BREAKING தீவிர அரசியலில் ஈடுபடுவேன்… சசிகலா!

பெங்களூர் தேவனஹள்ளி பண்ணை வீட்டிலிருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்ட சசிகலா தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியை கடந்து அதிமுக கொடி கட்டிய வேறு ஒரு காரில் சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டார் சசிகலா. ஆனால் ஓசூர் அருகே சசிகலாவின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் கொடுத்தனர்.

அதை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பெற்றுக் கொண்டார். பின்னர் வாணியம்பாடி டோல்கேட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா. 4 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சசிகலா.

Newest First Oldest First
6:08 PM, 8 Feb

கொடியை பயன்படுத்தியதற்காக அமைச்சர்கள் என் மீது புகார் கொடுத்தது அவர்கள் பயத்தை காட்டுகிறது- சசிகலா

5:58 PM, 8 Feb

தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை- சசிகலா.

அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன்- சசிகலா

5:58 PM, 8 Feb

கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது – சசிகலா.

பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டு வந்திருக்கிறது- சசிகலா.

புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம்- சசிகலா

5:57 PM, 8 Feb

4 ஆண்டுக்கு சிறைவாசத்துக்கு பின் முதல் பிரஸ் மீட்டிலேயே சசிகலா மிரட்டல் – இனி ஒரே பரபரப்புதான்

5:51 PM, 8 Feb

மக்களை மிக விரைவில் சந்திப்பேன் – சசிகலா.

4 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா.

5:51 PM, 8 Feb

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என சசிகலா பதில்

5:49 PM, 8 Feb

ஜெ. நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்- சசிகலா

5:48 PM, 8 Feb

நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் – சசிகலா

5:48 PM, 8 Feb

எம்ஜிஆர் பாடலை சுட்டிக்காட்டி சசிகலா காரில் அமர்ந்தபடியே பேசினார் சசிகலா

5:48 PM, 8 Feb

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வளர்க என சசிகலா முழக்கம்

5:48 PM, 8 Feb

தமிழ் பண்புக்கு நான் அடிமை- கொள்கைக்கு நான் அடிமை- சசிகலா

5:47 PM, 8 Feb

அதிமுகவுக்கு சோதனை வந்த போது பீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்தோம்- சசிகலா.

அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவோம்- சசிகலா.

5:42 PM, 8 Feb

வாணியம்பாடி டோல்கேட் அருகே செய்தியாளர்களை சந்திக்கிறார் சசிகலா

5:41 PM, 8 Feb

வாணியம்பாடி அருகே சசிகலா செய்தியாளர்களை சந்திக்கிறார்

5:16 PM, 8 Feb

கிருஷ்ணகிரி ஆவின் பாலகம் அருகே சசிகலாவுக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு

3:56 PM, 8 Feb

சசிகலா வாகனம் வரும் நிலையில் சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

2:29 PM, 8 Feb

சுதாகரன், இளவரசியின் மேலும் சில சொத்துகள் தமிழக அரசால் பறிமுதல்

2:10 PM, 8 Feb

ஸ்டாலின்-டிடிவி தினகரன் இணைந்து செயல்படுகின்றனர்.

ஸ்டாலினின் பி டீம்தான், சசிகலா அணி- ஜெயக்குமார் பேட்டி.

2:00 PM, 8 Feb

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தினால் சட்ட விரோதம்.

வழக்கு போட்டாலே கட்சிக்கு யாரும் உரிமை கோரிவிட முடியாது.

அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கிறார்கள்- அமைச்சர் ஜெயக்குமார்.

1:06 PM, 8 Feb

3வது முறையாக வாகனத்தை மாற்றினார் சசிகலா.

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வேன் வாகனத்தில் ஏறியுள்ளார் சசிகலா.

12:24 PM, 8 Feb

சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும் – தொண்டர்கள் விருப்பம்.

சசிகலா என்றால் பேராண்மை – அமமுக தொண்டர்கள்.

2021ல் சசிகலா முதல்வராவது உறுதி – அமமுக தொண்டர்கள்.

12:24 PM, 8 Feb

சசிகலாவை வரவேற்று அமமுகவினர் பட்டாசு வெடித்த போது விபத்து.

கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 2 கார்கள் பற்றி எரிந்தன.

போச்சம்பள்ளியில் 2 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

11:42 AM, 8 Feb

சென்னை தி.நகரில் சசிகலா தங்கும் வீடு அருகில் பிரம்மாண்ட போஸ்டர்கள்

11:36 AM, 8 Feb

அதிமுக துண்டு அணிந்த நிலையில் மாரியம்மன் கோவிலில் சசிகலா வழிபாடு

11:36 AM, 8 Feb

ஓசூர் முத்துமாரியம்மன் கோவிலில் சசிகலா வழிபடு

11:32 AM, 8 Feb

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சசிகலா பேனர் கிழிப்பு

11:18 AM, 8 Feb

அத்திப்பள்ளியில் சசிகலாவுடன் வந்த வாகனங்களை போலீஸ் தடுத்து நிறுத்தினர்

10:52 AM, 8 Feb

போலீஸ் நோட்டீஸ் கொடுத்தும் சசிகலாவின் காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்படவில்லை

10:46 AM, 8 Feb

சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நோட்டீஸை பெற்றுக் கொண்டார்

10:45 AM, 8 Feb

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என போலீசார் நோட்டீஸ் கொடுத்தனர்

Source: https://tamil.oneindia.com/news/chennai/vk-sasikala-return-to-tamil-nadu-live-updates-in-tamil-411351.html