சென்னையில் குறையும் கொரோனா.. காரணமான ‘ஆறு முக்கிய உத்திகள்’.. மாநகராட்சி ஆணையர் பேட்டி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த முன்னேற்றத்திற்கு ஆறு முக்கிய உத்திகள் காரணம் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 11 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினத்தை விட நேற்று குறைந்துள்ளது. 48455ல் இருந்து 48326 ஆக குறைந்துள்ளது. இதேபோல் கொரோனா பாதிப்பும் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மாலை வெளியான புள்ளி விவரப்படி, சென்னை ஒரே நாளில் 6297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

2 நாளாக.. தினசரி கொரோனா கேஸ்களில்.. இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம்.. 2 முக்கிய காரணம்!2 நாளாக.. தினசரி கொரோனா கேஸ்களில்.. இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம்.. 2 முக்கிய காரணம்!

கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில்,
“எங்களிடம் சுமார் 12,000 காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்கள் உள்ளனர். மக்களிடம் கொரோனா அறிகுறிகளை அடையாளம் காண ஒவ்வொரு நாளும் 100 முதல் 150 வீடுகளுக்கு அவர்கள் சென்று வருகிறார்கள்.. இப்படி அவர்கள் செல்வதன் மூலம் ஒவ்வொரு நாளும் சுமார் 5,000 பேர் அடையாளம் காண முடிகிறது, அதன் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்படுகின்றன. கோவிட் நோயாளிகளின் நிலைமை மோசமடைவதற்கு முன்பே நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்து வருகிறோம்.

என்னென்ன

காய்ச்சல் கணக்கெடுப்பு ஊழியர்கள், தன்னார்வலர்கள், கார் ஆம்புலன்ஸ், தடுப்பூசி மற்றும், தனியார் ஆய்வகங்களுக்கு முடிவுகளை சென்னை மாநகராட்சி மற்றும் டெலி-கவுன்சிலிங் மையங்களுக்கு மட்டுமே அனுப்ப உத்தரவு ஆகிய ஆறு உத்திகளை தான் கொரோனாவை குறைக்க கடைபிடித்து வருகிறோம்.

ஆக்சிஜன் பீதி குறைவு

இப்போது, ​​மாநகராட்சி அனுமதி இல்லாமல் நோயாளிகளுக்கு நேரடியாக சோதனை முடிவுகளை தெரிவிக்க வேண்டாம் என்று தனியார் ஆய்வகங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்த உத்தரவு ஆக்ஸிஜன் படுக்கைகளின் பீதி மற்றும் தேவையற்ற பெட் ஆக்கிரமிப்பைத் தவிர்க்கிறது. நோயாளிகள் 60 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தால், மருத்துவர்களுடன் மண்டல குழுக்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களை சோதித்து வீட்டு தனிமைப்படுத்தல் அல்லது மருத்துவமனையில் சேருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோவிட் பாசிட்டிவ்

60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் கார் ஆம்புலன்ஸில் சோதனை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள், இவை ‘108′ ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு துணைபுரிகிறது. சோதனையில் COVID பாசிட்டிவ் வருபவர்கள் வீடுகளுக்கு வந்தது வைரஸ் மேலும் பரவுவதைத் தவிர்க்கிறது. இது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்ட ஒரு உத்தி தான்

மருத்துவர்கள் நியமனம்

இதற்கிடையில், வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் உடல்நிலையைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி, 300 இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களையும், டெலி-கவுன்சிலிங் மையங்களில் சுமார் 1,500 தன்னார்வலர்களையும் நியமித்துள்ளது. புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் பயிற்சி மருத்துவர்களால் நோயாளிகளுக்கு 32,000 க்கும் மேற்பட்ட அழைப்புகள் செய்யப்பட்டிருக்கிது.

உளவியல் சிகிச்சை

தடுப்பூசியும் கொரோனாவை தடுக்க ஒரு முக்கியமான உத்தி. நாங்கள் தினமும் 280 தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு 30,000 பேரை உள்ளடக்குவதே எங்கள் இலக்கு. மேலும், சோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே அறிகுறிகள் உள்ளவர்களுக்கு துத்தநாகம் மற்றும் பிற மருந்துகளை வழங்குகிறோம். தொற்றுநோயின் மாறிவரும் தன்மையைக் கையாள சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாட்டு உத்திகளைக் கடைப்பிடித்தது. நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் உளவியல் பிரச்சினைகயைத்தான் ரு முக்கிய பிரச்சினையாக அடையாளம் கண்டுள்ளது. தேவைப்படுபவர்களுக்கு டெலி-கவுன்சிலிங்கும் வழங்கப்படுகிறது” இவ்வாறு ஆணையர் கூறினார்.

English summary
Chennai active case goes negative growth today after 11 days today at 48,326 less than yesterday. The Greater Chennai Corporation (GCC) has attributed the improvement to six important strategies the civic body adopted over a period of time.

Source: https://tamil.oneindia.com/news/chennai/why-covid-numbers-down-in-chennai-corpn-explain-six-important-strategies-421458.html