சென்னை: `புகாரளித்தும் நடவடிக்கை இல்லை!’ – உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மீது தொழிலதிபர் புகார் – Vikatan

சென்னைச் செய்திகள்

4.8.2021-ம் தேதி நான் கடையை திறக்க முடியாதபடி சிலர் கடையின் முன் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் கடையைத் திறக்க வேண்டும் என்று கூறியபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அதுதொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தபோது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் உதவி கமிஷனரிடம் தகவலைத் தெரிவித்தேன். ஆனால் அவரும் கண்டுக்கொள்ளவில்லை. அப்போதுதான் கடையை வாடகைக்கு விட்டவருக்கு ஆதரவாக உதவி கமிஷனரும் இன்ஸ்பெக்டரும் செயல்படுவது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மாயமான மின் மீட்டர்

இதுகுறித்து ஜெயலானி கூறுகையில், “வாடகை பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது என்னைக் கடைக்குள் செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். கடைக்குள் லட்சக்கணக்கான மதிப்பில் துணிகள் உள்ளன. தற்போது சட்டத்துக்கு புறம்பாக கடையை காலிசெய்ய காவல்துறையினர் மூலம் பல வகையில் முயற்சிகள் நடக்கின்றன. அதனால்தான் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறேன்” என்றார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட திருமங்கலம் காவல் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரைப் பெற்ற உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “ஏற்கெனவே திருமங்கலம் காவல் சரகத்தில் பணியாற்றிய உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், சில காவலர்கள் மீது சிபிசிஐடி போலீஸார் எஃப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது அதே காவல் சரகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் மீது புகார் வந்திருக்கிறது. எனவே புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்” என்றார்.

Source: https://www.vikatan.com/news/crime/businessman-complaint-against-chennai-police-officials