Boating at the Chennai Marina || சென்னை மெரினாவில் படகு சவாரி – அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 

* சென்னை மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும். ராயல் மெட்ராஸ் யாக்ட் உடன் இணைந்து படகு சவாரி தொடங்கப்படும். 

*  முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்

* ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் படகு சேவை தொடங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும்.

*  தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். 

* ஜவ்வாது மலை பகுதி பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்.

*சென்னையில் பொங்கலுக்கு ஆண்டுதோறும் இணைய வழியில் பிரமாண்ட கலை விழா நடத்தப்படும். 

* கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் கண்டுகளிக்கும்படி ஒளியூட்டப்படும்.

*கீழடி அகழ் வைப்பகத்திற்கு தேவையான 34 நிரந்த பணியிடங்கள் ரூ1.50 கோடியில் ஏற்படுத்தப்படும் என்றார். 

Source: https://www.dailythanthi.com/News/State/2021/09/04142509/Boating-at-the-Chennai-Marina.vpf