குட் நியூஸ்.. சென்னை, கோவை உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் மழை வெளுக்கும்- வானிலை ஆய்வு மையம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும், தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது: திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னையில் பாஜக நிர்வாகி அட்டூழியம்.. வயதான பெண்ணின் வீட்டை பிடுங்கி கொண்டு.. வெளியான ஷாக் தகவல்சென்னையில் பாஜக நிர்வாகி அட்டூழியம்.. வயதான பெண்ணின் வீட்டை பிடுங்கி கொண்டு.. வெளியான ஷாக் தகவல்

தேதி வாரியாக மழை

24.09.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள்

25.09.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

இடி, மின்னல்

26.09.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 27.09.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மேலூர் ( மதுரை ) 7, திருபுவனம் ( சிவகங்கை ), புலிப்பட்டி ( மதுரை ) தலா 6, கலவை ( ராணிப்பேட்டை ) 5, வெம்பக்கோட்டை (விருதுநகர்) , சேலம், தலா 4, கள்ளக்குறிச்சி , ஏற்காடு (சேலம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) , காரியாபட்டி (விருதுநகர்) தலா 3, கோவில்பட்டி (தூத்துக்குடி), சிவகங்கை, அரக்கோணம் (ராணிப்பேட்டை) , வேதாரண்யம் (நாகப்பட்டினம்) , ராசிபுரம் ( நாமக்கல்) , தண்டராம்பேட்டை ( திருவண்ணாமலை ) , வைப்பார் (தூத்துக்குடி ) , மானாமதுரை ( சிவகங்கை ), உசிலம்பட்டி (மதுரை ) , திருவாடானை (ராமநாதபுரம் ) தலா 2.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

குறிப்பு: வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24ஆம் தேதி மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை: 23.09.2021:சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஆந்திர கடல் பகுதிகளில் வீசக்கூடும். 23.09.2021, 24.09.2021: பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வீசக்கூடும். 26.09.2021, 27.09.2021: பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

English summary
The Chennai Meteorological Department has forecast light to moderate showers with thundershowers in a few places in Tamil Nadu and Puducherry Karaikal today and tomorrow due to the circulation of the atmospheric overlay.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-weather-rain-may-lash-chennai-and-other-parts-of-tamil-nadu-says-meteorological-depart-433752.html