சென்னை மக்களே கவனம்.. இதைச் செய்தால் இவ்வளவு அபராதம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மக்களே கவனம்.. இனிமேல் இதற்கு அபராதம்

சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறது. 

பொதுவிடங்களை தூய்மைப்படுத்துவது, சுவர்களை சுத்தப்படுத்தி, ஓவியங்கள் வரைவது, நடைபாதைகளை சீரமைப்பது போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மறுபக்கம் கால்வாய்களை சுத்தப்படுத்தி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி, சாக்கடைகள் அடைப்பெடுக்கப்பட்டு, மழை நீர் தேங்காத வண்ணம் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மிகக் கவனத்துடன் பணிகைளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், சிங்காரச் சென்னையாக்கும் முயற்சியில்  பொதுமக்களின் பங்கும் அவசியம் தானே. அதனால்தான்,  சென்னையில் பொதுவிடங்களில் குப்பைகளை எறியாத வண்ணம் தடுக்க அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

எங்கு குப்பை கொட்டினால் எவ்வளவு அபராதம் என்ற தகவலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

எனவே, பொதுமக்களே கவனமாக செயல்படுங்கள். குப்பைகளை குப்பைத் தொட்டியில் கொட்டி, அபராதத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/attention-people-of-chennai-from-now-on-it-will-be-fine-3718544.html