முதல் பிரேக்.. தமிழ்நாடு மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன சென்னை ரெய்ன்ஸ்.. இனி மழை எப்படி இருக்கும்? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை உச்சத்தில் இருக்கிறது. இதுவரை இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தமிழ்நாட்டை தாக்கிவிட்டன. இந்த நிலையில் இன்று வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி உருவாகிறது.

ஆனால் இதனால் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் மழை இருக்கிறது. இது பெரும்பாலும் வடக்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்பதால் தமிழ்நாட்டில் மழை இருக்கிறது.

Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?

இதனால் தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் அடிக்கும். இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை எப்படி இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையமான சென்னை ரெய்ன்ஸ் (chennairains) பக்கம் போஸ்ட் செய்துள்ளது.

சென்னை ரெய்ன்ஸ்

சென்னை ரெய்ன்ஸ் செய்துள்ள போஸ்டில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தண்டவாளத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ரயில் போல மிக வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. எங்கும் பிரேக் போடாமல் இந்த மழை ரயில் போல ஓடிக்கொண்டே இருந்தது. இந்த வேகமாக ரயில் எங்கேயாவது மோதிவிடுமோ என்று பலரும் நினைத்த போதுதான் தற்போது இந்த ரயில் பிரேக் போட முடிவு செய்துள்ளது.

பிரேக்

பல்வேறு சூழ்நிலை காரணமாக இந்த ரயில் பிரேக் போடுகிறது. ஆம் வடகிழக்கு பருவமழையை முதல் பிரேக் தற்போது வரப்போகிறது. இதனால் மழை அளவு மொத்தமாக குறையும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இனி மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். முக்கியமாக வட தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்ப்ட்டு, விழுப்புரம், பாண்டிச்சேரியை சுற்றி இருக்கும் பகுதிகளில் மழை குறையும்.

இயல்பு வாழ்க்கை

இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப வாய்ப்பு உள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். இந்த வடகிழக்கு பருவமழை இந்த முறை ஹைப்பர் ஆக்டிவ் மழையாக இருந்துள்ளது. எந்த பிரேக்கும் எடுக்காமல், தண்ணீர் வடிய கூட நேரம் கொடுக்காமல் மழை பெய்துள்ளது. அதே சமயம் இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில், முக்கியமாக தென் தமிழ்நாட்டிலும் அதை ஒட்டி இருக்கும் மாவட்டங்களிலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும்.

அரபிக்கடல்

அரபிக்கடலில் ஏற்பட்ட சூழலால் உருவான காற்று காரணமாக இந்த மழை பெய்யும். ஆனால் மொத்தமாக டிரெண்ட் படி பார்த்தால் மழை இனி படிப்படையாக் குறையும். அதன்பின் நாளையில் இருந்து நாம் கொஞ்சம் வறட்சியான வானிலையை பார்க்கக் முடியும். இதற்கு காரணம் வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் வடமேற்கு பயணம் காரணமாக வறண்ட வானிலை ஏற்படும்.

ஆந்திரா

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திராவின் கடலோர பகுதிகளை நோக்கி செல்கிறது. இது தென் பகுதிக்கு அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையை கொண்டு வரும். இதனால் அடுத்த ஒன்று முதல் இரண்டு வாரத்திற்கு வறண்ட வானிலை காணப்படும். அதே சமயம் தென் தமிழ்நாட்டிலும், கடலோர மாவட்டங்களிலும் சில பகுதிகளில் அங்கங்கே அடுத்த வாரம் லேசான மழை பெய்யும்.

சென்னை கனமழை

சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் திடீரென கனமழை பெய்யும். நேற்று பெய்தது போல. ஆனால் இந்த கனமழை 5-10 நிமிடங்களுக்கு மட்டுமே பெய்யும். முக்கியமாக கடலோர பகுதிகளில் இந்த மழை பெய்யும். அதன்பின் வெயில் அடிக்க தொடங்கும். ஆனால் மொத்தமாக பார்த்தால் சென்னையில் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று சென்னை ரெய்ன்ஸ் பக்கம் குறிப்பிட்டுள்ளது. Credit: chennairains.com

English summary
Weather Report: Chennai Rains tells a good news to Tamilnadu people on rains.

Source: https://tamil.oneindia.com/news/chennai/weather-report-chennai-rains-tells-a-good-news-to-tamilnadu-people-440811.html