சென்னை: உங்கள் வாக்கு சாவடி எங்கிருக்கு…? தெரிந்து கொள்ள இணையதளம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க உங்கள் வாக்கு சாவடி எங்கிருக்கு என தெரிந்து கொள்ள புதிய இணையதளம்.

சென்னை:

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலை சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்திடும் வகையில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த 45 பறக்கும்படை குழுக்களும், தலைமையிடத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் ஏற்கனவே செயல் பாட்டில் உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும், பொது மக்கள் தங்களின் மண்டலம் மற்றும் வார்டு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அதன் விவரங்கள், 200 வார்டுகளுக்கான மறு வரையறை குறித்த விவரங்கள், வேட்புமனு படிவம், உறுதிமொழி படிவம் உட்பட பல்வேறு படிவங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வாக்குச் சாவடியை அறிந்து கொள்ளும் வகையிலும் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மேற் குறிப்பிட்ட விவரங்களை http://election.chennaicorporation.gov.in/gcculb22/  என்ற இணையதள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/01/29152615/Chennai-Where-is-your-polling-booth-Website-to-know.vpf