சென்னை: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி – மருத்துவமனையில் உயிரிழப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த ரவுடி ஆகாஷ். இவர் பெரம்பூரை சேர்ந்த பால கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்ததாக கூறப்படுகின்றது. இதுகுறித்து, பால கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் கடந்த 20-தேதி இரவு ரவுடி ஆகாசை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர், 21-தேதி அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த நிலையில், ரவுடி ஆகாஷ் அதிக மதுபோதையில் இருந்தால் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று முடிவு செய்த போலீசார், கடந்த 21-ம் தேதி இரவு 11 மணிக்கு ஆகாசை அவரின் சகோதரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த ஆகாஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 8 நாட்கள் மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்த ஆகாஷ் இன்று உயிரிழந்து உள்ளார். ஆகாஷி மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த துறைரீதியாக உத்தரவிட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகே ஆகாஷின் மரணம் குறித்து உண்மைகள் வெளிவரும் என்று கூறப்படுகின்து.

போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி மருத்துவமனையில் உயிரிழப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/chennai-rowdy-who-was-taken-for-investigation-died-in-hospital-803639