சென்னை, கோவை, திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள்: ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வசதி – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

ராமநாதபுரம்–தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராமநாதபுரத்திற்கு நாள் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகைக்கு அவரவர் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். கடைசி நேர நெரிசலை தவிர்க்கும்வகையில் முன்பதிவு செய்யப்படுகிறது. தனியார் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு முறைகேடாக வசூலிக்கப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும்பஸ் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் கட்டண கொள்ளை தொடர்கிறது.

குடும்பத்தினருடன் சேர்ந்து பண்டிகை கொண்டாடும் ஆசையில் மக்களும் வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்கின்றனர்.இதனை தவிர்க்க மாநில தலைநகரான சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்னை, திருப்பூர், கோவையில் இருந்து தீபாவளிக்காக சிறப்பு பஸ்கள்இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 30 பஸ்கள் செப்.21, 22, 23ல் கூடுதலாக இயக்கப்படுகிறது.

மதுரை, கோவை, திருப்பூர் பகுதிகளில் இருந்து ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, ராமேஸ்வரத்திற்கு 20 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

பயணிகள் கூட்டத்தை பொறுத்து அந்த வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மதுரை –ராமநாதபுரம் வழித்தடத்தில் செப்.23 இரவு முழுவதும் பஸ் சேவை தொடரும்.

இதே போல் தீபாவளி முடிந்து மீண்டும் ஊருக்கு செல்பவர்களுக்கு வசதியாக செப்.25ல் கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுஉள்ளது. அனைத்துசிறப்பு பஸ்களுக்கும் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும், என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper


பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்க கோரிக்கை (7)

முந்தய


கொலைவழக்கில் 5 பேர் கைது

அடுத்து








வாசகர் கருத்து



Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=3150258