இதனால் புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து அல்லது மாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் திருநின்றவூர் – திருவள்ளூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
* ரயில் எண் 43001 கொண்ட மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் – ஆவடி இடையில் நள்ளிரவு 00.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* ரயில் எண் 43801 கொண்ட சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையில் நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* ரயில் எண் 43802 கொண்ட அரக்கோணம் – சென்னை கடற்கரை இடையில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், வரும் 6ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* ரயில் எண் 43832 கொண்ட திருவள்ளூர் – ஆவடி இடையில் நண்பகல் 12 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் பிப்ரவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதியளவு ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
* ரயில் எண் 43932 கொண்ட அரக்கோணம் – வேளச்சேரி இடையில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், வரும் 7ஆம் தேதி அரக்கோணம் – சென்னை கடற்கரை இடையில் மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* ரயில் எண் 43705 கொண்ட சென்னை கடற்கரை – திருவள்ளூர் இடையில் காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், ஆவடி – திருவள்ளூர் இடையில் மட்டும் 6, 13, 20 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
பிப்ரவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களை தவிர்த்து விட்டு செல்லும் ரயில்கள்
* ரயில் எண் 43217, 43219, 66047, 43507, 43901, 43413, 43221, 43509, 43223, 43903 மற்றும் 43821 கொண்ட ரயில்கள் பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாய்ப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/list-of-dates-chennai-suburban-train-cancelled-due-to-engineering-works/articleshow/89377787.cms