தக்க நேரத்தில் உதவிய கமல்.. துபாயில் கோப்பையை தட்டி தூக்கிய சென்னை ஸ்டார்ஸ்.. நேரில் சந்தித்து நன்றி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தக்க நேரத்தில் உதவியதால் துபாய் சென்று, DPL கிரிக்கெட் போட்டி தொடரில் வெற்றிபெற்ற சென்னை ஸ்டார்ஸ் அணியினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக, ஐஜேக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டது.

image‘கவலைப்படாதீங்க.. முதல் அலையைவிட 2ஆம் அலை ஆபத்தானது இல்ல, ஆனால்’ ஐசிஎம்ஆர் தலைவரின் அதிமுக்கிய தகவல்

தேர்தலில் ஒற்றை ஆளாக தனது கட்சிக்காகச் சூறாவளி பிரசாரத்தை கமல்ஹாசன் மேற்கொண்டிருந்தார். படு பிஸியாக இருந்தாலும்கூட, தொடர்ந்து மக்களுக்குத் தேவையான உதவிகளையும் சரியாக மேற்கொண்டே வந்தார்.

துபாயில் DPL தொடர்

அப்படியோ ஸ்வீட் சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக DPL கிரிக்கெட் போட்டி தொடர் துபாய் நாட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளத் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ஸ்டார்ஸ் அணி துபாய் செல்ல வேண்டியிருந்தது. இருப்பினும், முதலில் டிக்கெட், விசா உள்ளிட்டற்றை ஏற்பாடு செய்வதில் சிக்கல் இருந்தது.

கமல்ஹாசன் உதவி

இதனால் சென்னை ஸ்டார்ஸ் அணியின் 18 வீரர்கள் உதவி கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை கடந்த மார்ச் 31ஆம் தேதி கோவையில் நேரில் சந்தித்தனர். இதையடுத்து வீரர்கள் உடனடியாக DPL போட்டி தொடரில் கலந்து கொள்ள துபாய் செல்ல ஏதுவாக டிக்கெட் மற்றும் விசா கிடைக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் கமல்ஹாசன் உதவி செய்துள்ளார்.

சென்னை அணி வெற்றி

இதைத்தொடர்ந்து சென்னை ஸ்டார்ஸ் அணியினர் எவ்வித சிரமும் இன்றி துபாய் சென்றுள்ளனர். அங்கு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் மகி சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், DPL கோப்பையை வென்றனர். சமீபத்தில்தான் சென்னை ஸ்டார்ஸ் அணியினர் துபாயிலிருந்து தமிழகம் திரும்பினர்.

தக்க நேரத்தில் உதவிய கமல்

இதையடுத்து சென்னை வீரர்கள் தாங்கள் துபாய் செல்லத் தக்க நேரத்தில் உதவிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெற்றிக் கோப்பையுடன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும், அவரிடம் இருந்து வாழ்த்துக்களைப் பெற்றனர். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் ஹாசன், வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், சில நாட்கள் ஓய்வில் உள்ளார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-starts-team-met-mnm-chief-kamal-haasan-with-winning-trophy-and-thanked-for-his-timely-help-418284.html