குழந்தைகளை அதிகமாகத் தாக்கும் ’மெட்ராஸ் ஐ’ : அறிகுறிகள் இவைதான்..! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையில் மீண்டும் மெட்ராஸ் ஐ பரவும் நிலையில், பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக என்ன செய்ய வேண்டும்… செய்யக் கூடாது..? என்பதைப் பார்க்கலாம்.மெட்ராஸ் ஐ எனப்படும் கண் பாதிப்பு நோய், காற்றின் மூலம் மற்றும் பிறரைத் தொடுவதன் மூலம் பரவுகிறது. இந்த நிலையில், இந்த பாதிப்பு தற்போது மீண்டும் சென்னையில் பரவி வருகிறது.கடந்த நில நாட்களாக பெரியவர்கள் கண்களில் பாதிப்பு என்றும். சிறுவர்கள், குழந்தைகளுக்கு குளிர்க் காய்ச்சல், சளி, இருமல் , கண்களில் அழுக்கு வெளியேறுதல் என இதற்கான அறிவுரைகளுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.வைரலாகப் பரவும் தொற்றுகள் ஐந்து நாட்களிலேயே அடங்கிவிடும். கடந்த ஆண்டும் இதுபோன்ற தொற்றுகள்தான் பரவின. அந்த தொற்றுகளுக்கு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த முறை வந்திருக்கும் தொற்று குழந்தைகளையே அதிகமாகத் தாக்கியுள்ளது. அதுவும் சளி, இருமல், தொண்டை வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் வருகின்றனர்.காய்ச்சலோடு சிலர் கண்களில் எரிச்சல், பார்வையில் குறைபாடு, அழுக்கு வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளுடனும் வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு மருத்துவர் வாசுமதி கூறியுள்ளார்.அதேபோல் இந்த தொற்று பள்ளிக் குழந்தைகளுக்கே அதிகம் வருவதால் பள்ளியில் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றுவது அவசியம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.பெரியவர்களாக இருந்தால் அவர்களை வெளியே செல்ல அறிவுறுத்தாமல் வீட்டிலேயே ஓய்வெடுக்கச் சொல்கின்றனர். ஒருவேளை கண்கள் வீங்குதல், பார்வை மங்கலாகத் தெரிதல், கண்களில் தொடர்ந்து அழுக்கு வெளியேறி கண்களை மூடுதல் போன்றவை இருந்தால் மட்டுமே மருத்துவமனை வாருங்கள். இல்லையெனில் வீட்டிலேயே குணமாகும் வரை ஓய்வு எடுங்கள் என நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.தங்கள் மருத்துவமனைக்கு இதுவரை எட்டு பேர் கண் எரிச்சல், கண் வீக்கம், கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளுடன் வந்துள்ளதாக அகர்வால் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சௌந்தரி டைம்ஸ் பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ளார்.இதற்கு ஒரே தீர்வு பாதுகாப்புடன் இருப்பதுதான். நீங்களும் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டில் ஓய்வெடுங்கள். அதிகமானால் உடனே மருத்துவரை அணுவது நல்லது. இந்த வைரல் தொற்று வேகமாக பரவும் என்பதால் பள்ளி, அலுவலகங்களில் கவனமாக இருப்பது அவசியம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.கவனம்….கண்களில் தொந்தரவு, எரிச்சல் எனில் கசக்குவது, தொடுவது என செய்யாதீர்கள்.கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவுங்கள்.கண்களில் அழுக்கு இருந்தால் பஞ்சு கொண்டு எடுங்கள்.ஐ மேக்அப் , லென்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.[embedded content] 
Source: https://tamil.news18.com/news/lifestyle/health-madras-eye-back-with-fever-and-cough-with-viral-disease-1-esr-260057.html