சென்னைக்கு பெரும் தலைவலியாக உருவெடுக்கும் புளியந்தோப்பு… அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை! | In Chennai the most corona affected area is Puliyanthoppa – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையில் மிக அதிக பாதிப்புகளை கொண்ட பகுதியாக புளியந்தோப்பு இருக்கும் நிலையில் இன்று முதல் ’நம்ம சென்னை – கோவிட் விரட்டும் திட்டம்’ செயல்படுத்தப்படுகின்றது.

சென்னை புளியந்தோப்பு கொரோனா தொற்றால் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு லட்சம் பேரில் 241 பேர் வரை தொற்று பரவல் கண்டறிப்பட்டுள்ளது. அதிக பரவல் உள்ள பகுதியில் “நம்ம சென்னை – கோவிட் விரட்டும் திட்டம்,” இன்று முதல் (20.05.2020) அமல்படுத்தப்படுகிறது.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7672 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, தண்டையர் பேட்டை, வளசரவாக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 31 வார்டுகளில் கடந்த 3 நாட்களாக புதிய தொற்றுகள் எதுவும் கண்டறியபப்டவில்லை. இதைத்தவிர்த்து 136 வார்டுகளில் 10க்கும் குறைவான தொற்றுகளே கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சென்னையை பொறுவதவரை 167 வார்டுகளில் மிக குறைந்த அளவிலேயே தொற்று பரவல் இருந்து வருகிறது.

எஞ்சிய 33 வார்டுகளில் மட்டுமே நோற்று தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதிகளை கண்டறிந்து, நோய் தொற்று அதிகம் உள்ள வார்டுகளில் கண்காணிப்பை மிகவும் தீவிரப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, திரு.வி.க., மண்டலத்துக்கு உட்பட்ட 77 வார்டு, புளியந்தோப்பில் 9800 குடியிருப்புகளில், 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதியாக உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக இந்த வார்டில் மட்டும் சராசரியாக ஒரு லட்சம் பேரில் 124 முதல் 242 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.தண்டையார்பேட்டை, பனமரத்தொட்டி, முத்தையால் பேட்டை, சீதக்காதி நகர், கோயம்பேடு, மதுரவாயல் பகுதிகளில் சராசரியாக ஒரு லட்சம் பேரில் 41 முதல் 124 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

செம்பியம், பெரியமேடு, கிருஷ்ணம்மாபேட்டை, அம்பத்தூர், நெற்குன்றம் பகுதிகளில் சராசரியாக ஒரு லட்சம் பேரில் 14 முதல் 41 பேருக்கு தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது.

எனவே, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இந்த பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் ”மைக்ரோ ப்ளான்” செயல்படுத்தப்பட உள்ளது. ராயபுரம் பகுதியில் இன்று முதல் ”நம்ம சென்னை – கோவிட் விரட்டும் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது.

சென்னையில் 70 முதல் 75 சதவீத வைரஸ் தொற்று ஏற்கனவே வைரஸ் பாதித்த பகுதிகளில் உள்ள இல்லங்களில் இருந்து தான் ஏற்படுகிறது. இந்த பகுதியில் வீடு வீடாக சென்று செயன்று மொபைல் எக்ஸ்ரே, தெர்மல் ஸ்கிரினிங் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரே இடத்தில் 200 பேர் இருந்து கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட உள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see…

[embedded content]

Source: https://tamil.news18.com/news/coronavirus-latest-news/chennai-corona-status-vin-tami-2-292631.html