சென்னை- சேலத்துக்கு விமான சேவை தொடங்கியது! – நக்கீரன்

சென்னைச் செய்திகள்

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மே- 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது.
 

இந்த நிலையில் சென்னையில் இருந்து சேலத்துக்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு ட்ரூஜெட் நிறுவனத்தின் விமான சேவை தொடங்கியது. 26 பெண்கள், 2 குழந்தைகள் என 57 பயணிகளுடன் சென்னையிலிருந்து புறப்பட்ட முதல் விமானம் சேலத்தைச் சென்றடைந்தது. காலை 08.50 மணியளவில் 42 பயணிகளுடன் சேலத்தில் இருந்து சென்னைக்கு முதல் விமானம் வருகிறது. 

 

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-salem-flight-service-resumes