ஆஹா.. சென்னையில் செம்ம மாற்றம்.. வேகமாக குறையும் கன்டெய்ன்மென்ட் ஜோன்கள்.. லிஸ்டை பாருங்க – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் தற்போது 305 பகுதிகள் மட்டுமே கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ளது. அதிகபட்சமாக இராயபுரத்தில் 70 பகுதிகளும்,. திருவிநகர் பகுதியில் 41 ஏரியாக்களும் உள்ளன. இது தொடர்பான முழு விவரத்தை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12203 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5765 ஆக உள்ளது. 93 பேர் கொரோனாவால் சென்னையில் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 14 நாட்கள் தொடர்ந்து தொற்று நோய் பாதிக்காத பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் இருந்து நீக்கப்படுகின்றன. தினமும்இப்படி குறிப்பிட்ட பகுதிகள் நீக்ககப்பட்டு வந்தன. இன்று மட்டும் அதிகபட்சமாக சென்னையில் 51 இடங்கள் நீக்கப்பட்டுள்ளன.. அதிகபட்சமாக மாதவரம் மண்டலத்தில் 17 ஏரியாக்கள் நீக்கப்பட்டன.

தற்போதைய நிலையில் சென்னையில் 305 பகுதிகள் மட்டுமே கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ளது. அவற்றை விவரத்தை மண்டல வாரியாக பார்ப்போம்.

  • திருவெற்றியூர் 22
  • மணலி 16
  • மாதவரம் 33
  • தண்டையார் பேட்டை 1
  • இராயபுரம் 70
  • திருவிநகர் 41
  • அம்பத்தூர் 28
  • அண்ணா நகர் 0
  • தேனாம்பேட்டை 19
  • கோடம்பாக்கம் 8
  • வளசரவாக்கம் 2
  • ஆலந்தூர் 9
  • அடையாறு 13
  • பெருங்குடி 11
  • சோழிங்கநல்லூர் 12

அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தென்மேற்கு பருவ மழை குறித்து சூப்பர் அப்டேட் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்றால் அண்ணா நகர் மண்டலத்தில் கட்டுப்பாட்டு ஜோன் என்று எதவுமே இல்லை. இதேபோல் தண்டையார் பேட்டை மண்டலத்தில் ஒரு ஏரியா மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளது. வளசரவாக்கம் மண்டலத்தில் 2 இடங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு உள்ளது. தற்போதைய சூழலை பார்க்கும் போது விரைவில் சென்னை கொரோனாவில் இருந்து மீளும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது. இந்த பட்டியலும் சென்னையில் கொரோனா வேகமாக குறைவதை காட்டுகிறது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-containment-zones-list-today-386809.html