சென்னையில் கொரோனா வேகமாக குறைவது எங்கே.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17598 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 4ம் தேதி நிலவரப்படி மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 17598 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8900 பேர் குணம் அடைந்துள்ளனர். 8396 பேர் பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் உள்ள 15 மாவட்டங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 3224 ஆக உயர்ந்துள்ளது., தண்டையார்பேட்டையில் 2093 ஆகவும். கோடம்பாக்கத்தில் 2029 ஆகவும், தேனாம்பேட்டையில் 2014 ஆகவும், திருவிக நகரில் 1798 ஆக உள்ளது. அடையாறில் 1007 பேருக்கும், அண்ணா நகரில் 1525 பேருக்கும் வளசரவாக்கத்தில் 939 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 4ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

imageஅப்பாவுக்கு கொரோனா.. சிசிச்சைக்காக துடித்த மகள்.. அதற்குள்ளாகவே மரணமடைந்த பரிதாபம்!

  • திருவெற்றியூர்: 610
  • மணலி: 248
  • மாதவரம் 431
  • தண்டையார் பேட்டை 2093
  • இராயபுரம் 3224
  • திருவிக நகர் 1798
  • அம்பத்தூர் 651
  • அண்ணா நகர் 1525
  • தேனாம்பேட்டை 2014
  • கோடம்பாக்கம் 2029
  • வளசரவாக்கம் 939
  • ஆலந்தூர் 261
  • அடையாறு 1007
  • பெருங்குடி 201
  • சோழிங்கநல்லூர் 306
  • பிற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 163

எந்த மண்டலத்தில் எத்தனை பேர் குணம் அடைந்துள்ளனர் மற்றும் உயிரிழந்துள்ளனர், மருத்துவமனையில உள்ளார்கள் என்ற விவரத்தையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1671 பேர் குணம் அடைந்துள்ளனர். அங்கு 1522 பேர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். தேனாம்பேட்டையில் 1000, தண்டையாளர் பேட்டையில் 1281 பேர், கோடம்பாக்கத்தில் 785 பேர், திருவிக நகரில் 759 பேர், அடையாறில் 501 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள்..

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/here-s-the-zone-wise-breakup-of-covid-19-positive-cases-in-chennai-387410.html