தப்பாச்சு… அப்புறம் நீங்க தான்… அதிகாரிகளை அதிரவிட்ட சென்னை மாநகராட்சி! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்
தமிழகத்தில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளது. எனவே மாநில அரசு சார்பில் முன்னெச்சரிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மாவட்ட, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என பணிகள் வேகமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் முதன்மை பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், வேலைகள் தொடங்குவதற்கு முன்பாக லெவல் (நிலைகள்) கட்டாயமாக எடுக்கப்பட்டு ஆலோசகர்களுடன் சரிபார்க்க வேண்டும். மழைநீர் வடிகால் கட்டிய பின்னர் முறையாக வடிகாலில் நீர் செல்லவில்லை என்றால் சம்பந்தப்பட்ட உதவி அல்லது முதன்மை பொறியாளர்களே பொறுப்பு. கட்டி முடிக்கப்பட்ட வடிகால்களில் தேவையான அளவிலான நீரை லாரிகள் மூலமாக நிரப்பி,

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நீர் தேங்காமல் சரியாக செல்வதை பொறியாளர்கள் சரிபார்க்க வேண்டும். உரிய விதிமுறைகளின்படி வடிகால்களின் கான்கிரீட் பணிகள் மேற்கொள்ளப்படுவதை தவறாமல் உறுதி செய்திட வேண்டும். முறையான தடுப்புகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பணியை நிறைவேற்றும் போது பின்பற்ற வேண்டும்.

மேலும் வடிகாலின் அனைத்து நுழைவாயில்களுக்கும் சரியான சாய்வு மற்றும் கை தண்டவாள ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியம். பாதுகாப்பு அம்சங்களின் குறைபாடு காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட JE/AE மற்றும் மேற்பார்வை செய்த AEE/EE ஆகியோர் பொறுப்பாவார்கள் என்று கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் தொட்டி கிளீன் பண்ணும் ரோபோ; ஐஐடி மெட்ராஸ் அசத்தல் முயற்சி!

பணியை நிறைவு செய்வதற்கு முன்பு, TANGEDCO, CMWSSB, BSNL, OFC நிறுவனங்களுக்கு மண்டல அலுவலர் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அல்லது உரிய அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள் சேவைத் துறைகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-corporation-warns-engineers-for-issues-in-rain-water-harvesting-system/articleshow/92105596.cms