சென்னை தளர்வுகளுக்கு தயார் – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

  • Share this:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை  கொடியசைத்து தொடங்கி வைத்த பின் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பரிசோதனைகளை அதிகப்படுத்திய போது நல்ல முன்னேற்றங்கள் கிடைத்தன. இன்றைய தேதியில் நாள் ஒன்றுக்கு சென்னையில் 12,500 முதல் 13,000 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 5 லட்சம் பி.சி.ஆர். பரிசோதனை இதுவரை சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே 5 லட்சம் பரிசோதனைகளை கடந்த முதல் மாநகராட்சி சென்னை தான். மேலும்,18000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 11 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.  முகாம்கள் மூலம் சுமார் 60,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 8.5 லட்சம் பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் இருந்துள்ளனர்.சென்னை மாநகராட்சியில் களப்பணியில் மட்டும் 350 மருத்துவர்கள் உள்ளனர். சென்னையில் பரிசோதனைகளுக்கு மட்டும் 200 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

களப்பணியாளர்களுக்கு உணவு அளிக்க 30 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. எம்.டி.சி.பேருந்துகளுக்கு 14 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.மொத்தமாக சுமார் 400 கோடி ரூபாய் சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் படிக்க…அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடைசி தேதி, கட்டண விவரங்கள் வெளியீடு..

அதனை தொடர்ந்து பேசியவர், ”சென்னையில் இப்போதே முழு தளர்வு போல் தான் உள்ளது. பொருளாதாரம் வளர்ச்சியடையவும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் தளர்வுகள் தேவை. ஆகையால், சென்னையில் தளர்வுகளுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்தார்.


First published: July 18, 2020

Source: https://tamil.news18.com/news/coronavirus-latest-news/chennai-ready-for-relaxation-corporation-commissioner-prakash-vai-vet-318307.html