மீண்டும் ஜில் ஜில்.. கூல் கூல்.. சென்னை, திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மேற்கண்ட மாநிலங்களில் இருக்கும் தமிழக எல்லைகளிலும் மழை பெய்து வருகிறது

சில நேரங்களில் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியாலும் மழை பெய்கிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் மழை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

imageகெயில் எரிவாயு குழாய்…வேளாண்மை மண்டலம்…முதல்வருக்கு சீமான் கோரிக்கை!!

தமிழக கடலோர பகுதியில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் நேற்று அறிவித்துள்ளது. அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு தீவிர அல்லது தீவிர கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-will-get-moderate-rainfall-says-chennai-meteorological-department-394584.html