காய்கறி விலை: சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் காய்கறிகளுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருந்த சமயத்தில் தேவை அதிகரித்து விலை உயர்ந்தது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு காய்கறி வரத்து மீண்டும் உயர்ந்ததால் விலை கணிசமாகக் குறைந்தது. கடந்த சில நாட்களாகவே விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி, இன்றைய காய்கறி விலை என்ன என்று இங்கே பார்க்கலாம்.

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று (அக்டோபர் 3) 15 ரூபாய் குறைந்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 40 ரூபாயாக இருந்தது. அதேபோல வெங்காயம் விலை நேற்று 40 ரூபாயிலிருந்து இன்று 20 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ உருளைக் கிழங்கு 40 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி – ரூ.25
உருளைக் கிழங்கு – ரூ.30
வெங்காயம் – ரூ.20
கத்தரிக்காய் – ரூ.10
முட்டைக்கோஸ் – ரூ.18
பீன்ஸ் – ரூ.30
அவரைக்காய் – ரூ.10
கேரட் – ரூ.90
முள்ளங்கி – ரூ.10
வெண்டைக்காய் – ரூ.30
முருங்கைக்காய் – ரூ.25
பீட்ரூட் – ரூ.30
பாகற்காய் – ரூ.35
புடலங்காய் – ரூ.10
குடை மிளகாய் – ரூ.25
பச்சை மிளகாய் – ரூ.30
வாழைக்காய் – ரூ.3
சவுசவு – ரூ.10
இஞ்சி – ரூ.40
எலுமிச்சை – ரூ.40
நூக்கல் – ரூ.20
காளிபிளவர் – ரூ.25
சேனைக்கிழங்கு – ரூ.16
தேங்காய் – ரூ.22
கோவைக்காய் – ரூ.10
வெள்ளரிக்காய் – ரூ.5
மாங்காய் – ரூ.60
சுரைக்காய் – ரூ.20
கருணைக்கிழங்கு – ரூ.20
கொத்தமல்லி – ரூ.250

Source: https://tamil.samayam.com/business/business-news/chennai-koyambedu-market-vegetable-price-list-today-3rd-october-2020/articleshow/78458683.cms