வேலையை இழந்ததால் ஏடிஎம்மை உடைத்த நபர் கைது..! சென்னை சம்பவம் – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை பழைய மகாபலிபுரசாலை துரைபாக்கம் காவல் நிலைய சரகத்தில் அமைந்துள்ள எச்.டி.எப்.சி வங்கியின் ஏடிஎம்மை நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அப்போது ரோந்து பணியில் இருந்த தலைமைகாவலர் நந்தகோபால் மற்றும் ஆயுதபடை காவலர் வெற்றி செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஏடிஎம் மெசினின் பூட்டை உடைத்து பணம் திருட முயன்ற நபரை கைது செய்தனர்.

விசாரணையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் (28) என்பதும் வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது வேலையை விட்டதால் செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம்மில் திருட முயற்சித்ததாகவும் தெரிவித்தார்.

உனக்கு முன்னால 3 பேரு… குழந்தைகூட இருக்கு… திருச்சி கில்லாடி கணவன் கைது

அதனையடுத்து லாரன்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இரவு ரோந்து பணியில விழிப்புடன் இருந்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏடிஎம்மில் பணம் திருட்டை தடுத்த ரோந்து காவல் துறையினரை காவல் ஆணையாளர் பாராட்டினார் .

Source: https://tamil.samayam.com/latest-news/crime/youth-breaks-atm-machine-for-robbery-after-losing-jobs-in-chennai/articleshow/78604605.cms