வரி செலுத்துவோருக்கு இவ்வளவு கோடி ஊக்கத்தொகையா? -அசத்தும் சென்னை மாநகராட்சி! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சிக்கு முக்கிய வருவாயாக சொத்து வரி உள்ளது. நிதியாண்டின் ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்திலும் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை அதன் உரிமையாளர்கள் மாநகராட்சி செலுத்திவிட வேண்டும்.

இதன்படி. நடப்பு நிதியாண்டின் (2020-21) இரண்டாவது நிதியாண்டுக்கான சொத்து வரியை அபராதமின்றி செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் (அக்.15) நிறைவடைகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடு உள்ளிட்ட சொத்துக்களின் உரிமையாளர்களில் 5.18 லட்சம் பேர், அக்டோபர் 10 ஆம் தேதி வரை தங்களுக்கான சொத்து வரியை செலுத்தியுள்ளனர்.

சொத்து வரி செலுத்தினார் ரஜினிகாந்த்… பணம் வந்தது எப்படி?

குறித்த கால அவகாசத்துக்குள் சொத்து வரியை செலுத்திய உரிமையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மொத்தம் 4.56 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த கால அவகாசத்துக்குள் சொத்து வரியை செலுத்தும் உரிமையாளர்களுக்கு அவர்கள் செலுத்தும் வரித் தொகையில் 2 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5, 000 ரூபாய் அளிக்கப்படுகிறது.

License renewal: தொழில் உரிமம் புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு… எதுவரை தெரியுமா?

அதேசமயம், குறித்த காலத்தில் சொத்து வரி செலுத்த தவறும் உரிமையாளர்களுக்கு 2 சதவீதம் தனி வட்டியுடன் வரி வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-corporation-gives-incentive-to-property-owners-who-paid-tax-before-deadline/articleshow/78682381.cms