சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,  

சென்னை சவுகார்பேட்டை உள்ள குடியிருப்பில் வசித்து வந்த தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் மற்றும் மகன் ஷீத்தல் சந்த் ஆகிய 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், கைலாஷ், அவரது கூட்டாளிகளான கொல்கத்தாவைச் சேர்ந்த ரவீந்திரநாத், விஜய் உத்தம் கமல் ஆகியோரை கைது செய்த யானைக்கவுனி போலீசார், மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியான ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா, விலாஸ் மற்றும் ராஜிவ் ஷிண்டே ஆகியோர் ஆக்ராவில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, முன்னாள் ராணுவ அதிகாரி ராஜுவ் துபேவுக்கு சொந்தமானது என தெரியவந்தது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், ராஜூவ் துபேவின் மனைவியும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான மது துபேவின் பெயரில் இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராஜூவ் துபே கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்வதற்க்காக துப்பாக்கி கொடுத்ததாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.  

முன்னதாக ராஜூவ் துபே, அவரது மனைவி மது துபே ஆகியோரை நேற்று சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தினர். 

Source: https://www.dailythanthi.com/News/State/2020/11/23102908/3-shot-dead-in-Chennai-sowcarpet-Retired-Army-officer.vpf