‘மாஸ்க்’ அணியாதவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. ஒரு பாடம்! – நக்கீரன்

சென்னைச் செய்திகள்

 

 

சென்னை தண்டையார்பேட்டையில் தமிழக சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

 

அப்போது பேசிய சுகாதாரத்துறை செயலர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், “மாஸ்க் அணியாதவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. பாடமாக அமைந்துவிட்டது. கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகளில் உணவகம் நடத்துவோருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அனைத்து பல்கலைக்கழகம், விடுதிகள், மேன்ஷனில் கரோனா பரிசோதனை நடத்தப்படும். தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் கேண்டீன் தொழிலாளி மூலம்தான் முதல் முதலாக கரோனா ஏற்பட்டது. கேண்டீன் தொழிலாளியிடமிருந்து மாணவர்களுக்கு கரோனா பரவியிருக்கலாம்.” என்றார்.

 

அதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், “சென்னையில் 3-ல் ஒருவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா இறப்பு விகிதத்தை 1 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.” என்றார்.

 

 

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-corporation-commissioner-and-health-secretary-press-meet