வாடகையும் இல்லை.. குடியிருக்க யாரும் முன்வரவில்லை.. சென்னை வீட்டு ஓனர்களை கலங்க வைத்த 2020 – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: 2020ம் ஆண்டில் கொரோனா லாக்டவுன் காரணமாக வாடகையும் கிடைக்காமல், வீட்டில் குடியிருக்க ஆளும் இல்லாமல் சுமார் 4 மாதங்கள் வீட்டு ஓனர்கள் பலர் கலங்கி போனார்கள். கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத துயரத்தை மக்கள் சந்தித்தால் அதன் எதிரொலியை சென்னை வீட்டு ஓனர்களும் அனுபவித்தார்கள். இன்று வரை அதன் பாதிப்பு சென்னையில் காணப்படுகிறது.

சென்னையில் முக்கிய பகுதிகளில் வாடகைக்கு வீடு கிடைப்பது எவ்வளவு கடினம் என்பது சென்னைவாசிகளுக்கு மட்டுமே தெரியும். அப்படிப்பட்ட சூழலில் வீட்டு ஓனர்கள் சொல்வது தான் வாடகை, அட்வான்ஸ் என்ற நிலை இருக்கிறது.

சென்னையில் திருவல்லிக்கேணி தொடங்கி திருவான்மியூர் வரை உள்ள கடற்கரையை ஒட்டிய பகுதிகள் தான் மிக மிக உச்சகட்ட வாடகை வசூலிக்கப்படும் பகுதிகள் ஆகும். இந்த பகுதிகள் தவிர, நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம், தியாகராய நகர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோட்டூர்புரம் பகுதிகளிலும் வாடகை மிக அதிகம்.

imageதிருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம்

வாடகை அதிகம்

இதுதவிர சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள கந்தன்சாவடி உள்பட ஓஎம்ஆர் சாலைகளிலும் வாடகை அதிகம். ஒட்டுமொத்தமாக சென்னையில் என்று எடுத்துக்கொண்டால் மைலாப்பூர் பகுதியில் தான வாடகை மிகமிக அதிகம் ஆகும். அட்வான்ஸ் தொகையும் இங்கு தான் மிக அதிகம். வாடகைக்கு வீடு கிடைப்பது கடினமான பகுதியும் இது தான்.

வாடகை இல்லை

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக கற்பனைக்கு எட்டாத பேரிழப்பை சென்னை மக்கள் சந்தித்தனர். வேலைக்கு போக முடியாமல் போன காரணத்தால் சென்னையில் வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் பலரால் வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். பல ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று அறிவித்தால் வீடுகளை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கே பலரும் போனார்கள். இன்று வரை பலர் சென்னை திரும்பவில்லை.

கடனை கட்ட முடியவில்லை

வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்ற அறிவிப்பால் வீட்டு வாடகையை நம்பி வாழ்ந்த பல சென்னை வீட்டு ஓனர்கள் கலங்கி போனார்கள். சென்னை முழுக்க பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சோழிங்கநல்லூர், ஓஎம்ஆர் சாலை, திருவான்மியூர் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருந்தது. வங்கியில் வீட்டுக்கு வாங்கி கடனை கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

6 மாதம் ஆகும்

அதேநேரம் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்ற அறிவிப்பால் சொந்த கிராமங்களுக்கு போனவர்கள் அங்கேயே செட்டில் ஆனார்கள். டிசம்பர் 31 வரை பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதித்தன. இந்நிலையில் இன்னும் நீட்டிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. தற்போது ஓரளவு இயல்பு நிலை திரும்பி பழையபடி வாடகை வசூலிக்க தொடங்கிவிட்டாலும், நிலைமை சீராக சென்னைக்கு குறைந்தது இன்னும் 6 மாதங்கள் ஆகும்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/year-ender-2020-no-rent-no-one-interest-to-live-chennai-homeowners-upset-in-2020-406934.html