பொங்கல் பரிசு: தமிழக அரசு மாலைக்குள் சுற்றறிக்கை வெளியிடாவிட்டால் HCஐ திமுக அணுகும் – Zee Hindustan தமிழ்

சென்னைச் செய்திகள்

புதுடெல்லி: தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொடர்பாக திமுக தாக்கல் செய்த அவசர வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதன்படி, இன்று மாலைக்குள் சுற்றறிக்கையை அரசு மாலை 5 மணிக்குள் வெளியிடாவிட்டால், திமுக மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகும் என்று திராவிட முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட து. அதில், ’பண்டிகை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration card)  ‘டோக்கன்’ வழங்கப்படுகிறது. அந்த டோக்கனில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள், ஆளுங்கட்சியின் தேர்தல் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அரசு திட்டத்தில் இதுபோல ஆளுங்கட்சியினர் சுய விளம்பரம் செய்வது, இந்திய தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானதாகும். தகுதியுள்ள பயனாளிகளுக்கு இந்த தொகை போய் சேராது. முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த வகையான டோக்கன்களை வழங்க தடை விதிக்க வேண்டும் என்று தி.மு.க அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முறையிட்டிருந்தார்.  

Also Read | பொங்கல் பரிசுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!

நேற்று மாலை நடைபெற்ற வழக்கு விசாரணையில் அரசு (TN Govt) தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், ‘தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் வாயிலாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் 2 மாவட்டங்களில் மட்டும் ஆர்வமிகுதியால் கட்சியினர் சிலர் அ.தி.மு.க. தலைவர்களின் புகைப்படத்துடன் கூடிய டோக்கன்களை வழங்கியுள்ளனர். எனவே அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

அதோடு, அரசு வழங்கும் அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு (Pongal bonanza) வழங்கப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது. அதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழங்கும் அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பொங்கல் பரிசுத் தொகையாக அரிசி அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஜனவரி 4ஆம் தேதி முதல் பரிசுத் தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Also Read | உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கா?.. அப்போ உங்களுக்கு ₹.2500 பணம் கிடைக்கும்..!

இந்நிலையில் அரசு நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று மாலைக்குள் சுற்றறிக்கை வெளியிடாவிட்டால் HCஐ திமுக அணுகும் என்று கூறப்படுகிறது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR   

Source: https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-will-go-to-madras-hc-if-circular-not-issued-by-evening-353417