நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
மாதிரிப் படம்

  • News18
  • Last Updated:
    January 4, 2021, 7:22 PM IST
  • Share this:
வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவத்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் தலைஞாயிறு ஆகிய இடங்களில் தலா 6 செண்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக கூறினார்.

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் புவியரசன் கூறியுள்ளார்.

Also read… திமுக உடையும் தருணம் வந்துவிட்டது – அமைச்சர் ஜெயக்குமார்

இதனிடையே கிழக்கு திசை காற்று பலமாக உள்ளதால் ஜனவரி 10ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை காலம் முடிந்தாலும், 12ம்தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும், தென்மாவட்டங்களில் மழைக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு ஜனவரியில் மழை அதிகம் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.


First published: January 4, 2021

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-met-department-has-said-rain-in-coastal-districts-due-to-the-circulation-of-the-atmosphere-vin-389173.html