சென்னை- அவுரா இடையே தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் 5-ந்தேதி முதல் விடப்படுகிறது – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னை சென்ட்ரலில் இருந்து அவுராவிற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்ட் ரெயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரெயில் சேவை வருகிற 5-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது.

சென்னை:

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரெயில் போக்குவரத்து படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. ஆனாலும் வழக்கமான சேவையாக அறிவிக்காமல் சிறப்பு ரெயில்களாக விடப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து ஒரு சில ரெயில்கள் தவிர அனைத்து ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து அவுராவிற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்ட் ரெயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரெயில் சேவை வருகிற 5-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது.

அவுராவில் இருந்து தினமும் காலை 11.55 மணிக்கு இந்த ரெயில் புறப்படும். 3-வது நாள் அதிகாலை 3 மணிக்கு இந்த ரெயில் சென்ட்ரல் வந்து சேருகிறது.

இதேபோல சென்ட்ரலில் இருந்து தினமும் இரவு 7.15 மணிக்கு புறப்படும் சூப்பர் பாஸ்ட் ரெயில் மறுநாள் இரவு 11 மணிக்கு ஹவுரா சென்றடைகிறது.

இந்த ரெயில் சேவை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 8 மணியில் இருந்து தொடங்கி உள்ளது.

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/district/2021/02/03112244/2320636/Tamil-News-Chennai-to-howrah-express-train-started.vpf