தமிழகத்தில் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.. இன்று 6,618 பேருக்கு தொற்று.. சென்னை, கோவையில் அதிக பாதிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இந்த முறை முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது. சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

6,000-ஐ கடந்த பாதிப்பு

கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஸ்களில் பயணிக்க கட்டுப்பாடு, தியேட்டர்கள், கோவில்கள், மால்கள் என அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6,000-ஐ கடந்துள்ளது.

6,618பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,33,434 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 12,908 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 2,314 பேர் குணமடைந்தனர்.

சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?

இதுவரை மொத்தம் 8,78,571 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 41,955 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 87,767 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,01,89,603 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 2,000-ஐ கடந்த பாதிப்பு

சென்னை, கோவை, செங்கல்பட்டில் பாதிப்பு தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 2123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, தினசரி பாதிப்பு 2,000-ஐ கடந்துள்ளது. செங்கல்பட்டில் 631 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 617 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 206 பேருக்கும், மதுரையில் 173 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 276 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/6-618-people-were-infected-with-corona-in-tamilnadu-today-417577.html