யாஸ் புயலால் மழை.. சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு.. காற்றழுத்தம் புயலாக மாறிவிட்டால் வெதர்மேன் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்தம் உருவாகிறது.

இது புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவிக்கிறது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இன்று 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. அடுத்த 4 நாட்களுக்கு எப்படி.. வானிலை மையம் ரிப்போர்ட்இன்று 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. அடுத்த 4 நாட்களுக்கு எப்படி.. வானிலை மையம் ரிப்போர்ட்

தென் ஆந்திரம்

இதனால் வடதமிழகம் மற்றும் தென் ஆந்திரம் ஆகிய பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது. கடந்த வியாழக்கிழமை மாலை சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் பயங்கர காற்றுடன் மழை பெய்தது.

சென்னை

அது போல் நேற்றும் இரண்டாவது நாளாக நேற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இன்றும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில் இன்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்யும்.

மேகக் கூட்டங்கள்

புதிய காற்றழுத்தம் உருவாகிவிட்டால் மேகக் கூட்டங்கள் கலைந்து சென்றுவிடும். மழையும் குறைந்துவிடும். குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறிவிட்டால் வெப்பநிலை அதிகரிக்கும். எனவே இன்றும் மழையை மகிழ்ச்சியாக வரவேற்கலாம். குறைந்த காற்றழுத்தம் உருவாகிவிட்டால் சென்னை மட்டுமில்லாது தமிழகத்திலும் மழை குறையும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சேதம்

இந்த யாஸ் புயல் ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த புயல் எத்தகைய சேதத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் தே புயல், கடந்த 18ஆம் தேதி குஜராத் அருகே கரையை கடந்தது. இதனால் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெறும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Tamilnadu Weatherman says that Today too KTC (Chennai) has chance of rains in some parts of the city.Rains will reduce in TN too after low forms.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-weatherman-says-that-today-too-ktc-chennai-has-chance-of-rains-in-some-parts-of-the-city-421654.html