வெறும் 0.99.. மேஜிக் எண்ணை தொட்ட சென்னை.. ஒன்றரை வருட ஏக்கத்துக்கு முடிவு.. சாதித்த தமிழ்நாடு அரசு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ் சதவிகிதம் 1% கீழ் சென்றுள்ளது. மெட்ரோ நகரங்களில் சென்னை மிக சிறப்பான அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி உள்ளது இதன் மூலம் உறுதியாகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மே மாத தொடக்கத்தில் தினசரி கேஸ்கள் உச்சத்தில் இருந்த போது புதிய தமிழ்நாடு அரசு பதவி ஏற்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதும், பலி எண்ணிக்கையை குறைப்பதும் திமுக அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் சசிகலா?.. தொண்டர்களை சந்திக்கிறார்?.. ஜூலை 5 க்கு பிறகு சாத்தியம்?ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் சசிகலா?.. தொண்டர்களை சந்திக்கிறார்?.. ஜூலை 5 க்கு பிறகு சாத்தியம்?

முக்கியமாக சென்னையில் தினசரி கேஸ்கள் 7000 வரை சென்றது. இதனால் தமிழ்நாடு கொரோனா இரண்டாம் அலையில் இருந்து மீளுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

ஆனால்

ஆனால் தமிழ்நாட்டில் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கேஸ்கள் கட்டுப்படுத்தப்பட்ட. அதிக பட்சம் கொரோனா சோதனை, தீவிர கட்டுப்பாடு, காய்ச்சல் முகாம், தயார் நிலையில் வைக்கப்பட்ட மருத்துவமனைகள், துரிதமான நடவடிக்கைகள் என்று தமிழ்நாடு அரசு கொரோனா கட்டுப்பாட்டு பணியில் புதிய பாய்ச்சல் காட்டி கேஸ்களை குறைத்தது.

கேஸ்கள் குறைந்தது

இதன் காரணமாக மே மாத பிற்பகுதியில் கேஸ்கள் லேசாக குறைந்தது. அதன்பின் ஜூன் தொடக்கத்தில் மேலும் கேஸ்கள் சரிந்த நிலையில், ஜூன் இறுதியில் தினசரி கேஸ்க 5 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுவிட்டது. தற்போது கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 35,881 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்டிவ் கேஸ்கள்

சென்னையில் ஆக்டிவ் கேஸ்கள் 2,446 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. நேற்று சென்னையில் 232 பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டது. சென்னையில் கொரோனா பாசிட்டிவிட்டு ரேட் எனப்படும் டிபிஆர் சதவிகிதம் 1% க்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் தற்போது டிபிஆர் சதவிகிதம் 0.99% ஆக உள்ளது. கிட்டத்தட்ட கொரோனா பரவல் தொடங்கி ஒன்றரை வருடத்திற்கு பின் சென்னையில் டிபிஆர் சதவிகிதம் 0.99% ஆக உள்ளது.

சோதனை

அதாவது சென்னையில் 100 பேரை சோதனை செய்தால் ஒருவர் அல்லது ஒருவருக்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா ஏற்படுகிறது. சென்னையில் கடந்த 10 நாட்களாக இதுவே நிலைமை. மெட்ரோ சிட்டிகளில் சென்னையில்தான் தற்போது குறைவான பாசிட்டிவிட்டி ரேட் உள்ளது. கடந்த மே 10-16 தேதிகளில் சென்னையில் டிபிஆர் சதவிகிதம் 23.2% ஆக இருந்தது. இதுதான் அதிக டிபிஆர் சதவிகிதம் ஆகும்.

மீண்டது

அப்போது சென்னையில் கிட்டத்தட்ட 7000 கேஸ்கள் வரை வந்தது. சென்னை மோசமான நிலையை எட்டுமோ என்ற அச்சம் நிலவியது. அப்படி ஒரு மோசமான நிலையில் இருந்த சென்னையில் தற்போது கொரோனா டிபிஆர் சதவிகிதம் 0.99% ஆக குறைந்தது பெரிய நம்பிக்கை அளிக்க கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இது சென்னையில் மூன்றாம் அலை பரவலையும் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

English summary
Coronavirus: Chennai’s positivity rate goes below 1% for the first time. Now the positivity rate is 0.99%.

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-chennai-postivity-rate-goes-below-1-for-the-first-time-426036.html