புழுதிக்காற்றுடன் சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை.. விடிய விடிய கொட்டியது! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்மேற்குப் பருவக்காற்று சில்லென்று வீச... தமிழகம் முழுவதும் தூள் கிளப்பப்போகும் மழைதென்மேற்குப் பருவக்காற்று சில்லென்று வீச… தமிழகம் முழுவதும் தூள் கிளப்பப்போகும் மழை

மேகமூட்டம்

நேற்று மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து பயங்கர புழுதிக் காற்று வீசியது. பின்னர் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

மழை பெய்தது

கோயம்பேடு, கிண்டி, முகப்பேர், வடபழனி, நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம் அடையாறு, மந்தைவெளி, சேத்துப்பட்டு, அண்ணாமலை, புரசைவாக்கம், வளசரவாக்கம், ராமாபுரம், போரூர், பூந்தமல்லி, மயிலாப்பூர், பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூரில் மழை பெய்தது.

பரவலாக மழை

அது போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அதிக மழை பெய்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்தது. லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.

தென்காசி

அது போல் தென் பகுதிகளான தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது. தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் பூமி குளிர்ச்சியான நிலையை அடைந்தது.

English summary
Heavy rain in Chennai and most of the parts of moffussil areas.

Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-lashes-in-chennai-15-07-21-427085.html