மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் நவீன டிஜிட்டல் மையம்… திமுக ஆட்சி என்பதால் கருணாநிதி பெயரா? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • சென்னை பல்கலைக்கழகத்தில் நவீன ஆன்லை் டிஜிட்டல் மையம்.
  • கருணாநிதி பெயரில் அமைக்கப்பட உள்ளது..
  • 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மையம் ஏற்படுத்தப்பட உள்ளது.

கொரோனா நோய்தொற்று காரணாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கற்பித்தல் முறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஆன்லைன் பயிற்று முறையை மேலும் நவீனமாக்க வேண்டிய அவசியம் எற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ‘ஆன்லைன்’ கல்வியை நவீனமயமாக்கும் நோக்கில், சென்னை பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் மையம் அமைக்கப்படவுள்ளது

இதுகுறித்து இப்பல்கலைக்கழத துணைவேந்தர் கவுரி கூறும்போது, கல்லுாரி மாணவர்களுக்கான அனைத்து ஆன்லைன் பாடங்களையும் தமிழில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கலெக்டர் கண் முன்னே தாக்கப்பட்ட விஏஓ… அகழாய்வுக்கு ஆதிச்சநல்லூர் சென்றபோது சம்பவம்!

‘தொலைக்காட்சி மூலம் தொல்காப்பியம்’ என்ற திட்டத்தில் தொல்காப்பியம் குறித்த வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, ஆன்லைன் கல்வியை நவீனப்படுத்தும் நோக்கில், பல்வகை ஊடக ஆராய்ச்சி மையம் என்ற டிஜிட்டல் மையம் ஏற்படுத்தப்பட உள்ளது.

மொத்தம் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது” என்று அவர் தெரிவித்தார். இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/new-digital-centre-for-school-and-college-students-in-the-name-of-karunanidhi-will-be-constructed-in-madras-university/articleshow/84852297.cms