சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை.. முழு விவரம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் இன்று முதல் ஆகஸ்டு 9-ம் தேதி வரை வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. .

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்து வருவது கவலையை எற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்1,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று பாதிப்பை வீட அதிகமாகும்.

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து 2-வது நாளாக அதிகரித்துள்ளது. வைரஸ் வெகமெடுத்து வருவதால் ஆகஸ்டு 9-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை.

சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள் / மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன்கருதி முடிவு செய்யலாம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் முதல்வரின் உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் நாளை முதல் ஆகஸ்டு 9-ம் தேதி வரை வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் எந்தெந்த இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. இதன் விவரம் பின்வருமாறு:-

* ரங்கநாதன் தெரு வடக்கு உஸ்மான் சாலைமுதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை

* புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை

* ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை

* ஃபக்கி சாஹிப் தெரு, * அபிபுல்லா தெரு, * புலிபோன் பஜார், * என்.எஸ்.சி போஸ் சாலை

* குறளகம் முதல் தங்க சாலை சந்திப்பு வரை

* ராயபுரம் மார்க்கெட் , * அமைந்தகரை மார்க்கெட் பகுதிகள், * கொத்தவால்சாவடி மார்க்கெட்
* ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதிகள்

English summary
The Chennai Corporation has banned the opening of shopping malls and shops in 9 public places in Chennai from tomorrow till August 9

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-has-banned-the-opening-of-shopping-malls-and-shops-in-9-public-places-from-tomor-428550.html